loader image

st.assisi matric hr.sec.school

LEO Charitable Trust - History

லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட்–வரலாறு

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு மையிலோடையைச் சேர்ந்த திரு. அந்தோனி சாமி, திரேஸ் அம்மாள் ஆகிய இருவரும்தங்களின் ஆறு பிள்ளைகளில் ஒருவரான Fr.அந்தோனி சேவியரை இறைப்பணியும் மக்கள் முன்னேற்றப் பணியும் ஆற்றிட வேண்டும் என்பதற்காக குருவாக அர்ப்பணித்தனர். 1992 –ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 – ம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்காகக் குருப்பட்டம் பெற்ற Fr.அந்தோனி சேவியர் சமய, சமூக கல்விப் பணிகளில் சிறந்து  விளங்கியதையும், பல்வேறு திறமைகளை அவர் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர் திரு. அந்தோனி சாமி, திரேஸ் அம்மாள் தம்பதியினர். சமய வட்டத்தையும் தாண்டி தங்கள்மகனின் பணி விரிவடைய வேண்டும் என்னும் கனவோடு திரு. அந்தோனி சாமி லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்னும் தொண்டுநிறுவனத்தை 2௦02–ம் ஆண்டு தனது மகன் Fr.அந்தோனி சேவியருக்காகத்  தொடங்கினார்(founder).அதன் நிர்வாக அறங்காவலராக  ( மானேஜிங் ட்ரஸ்டி )     தனது மகன்  Fr.அந்தோனி சேவியரை நியமித்து கொண்டு நிறுவனம் வளர்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், பொருளுதவியையும் தொடர்ந்து வழங்கி வந்தார். லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்பது பப்ளிக் சாரிட்டி(public charitable) நிறுவனம் ஆகும்.  திரு. அந்தோனி சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி  லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட்  சாரிட்டி(charity) நிறுவனமாகத் தொடர வேண்டும் என்பதற்காக அதன் பயன்பாட்டுக்கென வாங்கப்பட்ட  சொத்துக்கள் அனைத்தும் லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்னும் பெயரிலேயே வாங்கப்பட்டன. அதன் சொத்துக்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதற்காகத்தானே தவிர தனிப்பட்ட குடும்பங்களுக்கானது அல்ல. தனி நபர் அல்லது குடும்பத்தினர் லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் அல்லது அதன் சொத்துக்களில் உரிமை கொண்டாடுவதற்கு சட்டப்படி அருகதை உள்ளவர்கள் அல்ல. லியோ சாரிட்டபில் நிறுவனம் தன்னிகரில்லா சேவை நிறுவனமாக உயர்ந்து ஒளி விசிட அதன் மானேஜிங் ட்ரஸ்டியான Fr.அந்தோனி சேவியர் தன் காலத்துக்குப் பின் தனது  பணியைத் தொடர்ந்திட உயில் மூலமாக ஒருவரை நியமிக்கலாமே தவிர சாகும் வரை அவரே இந்த ஒப்புயர்வற்ற கல்விப்பணியாற்றிட வேண்டும் என்று திரு. அந்தோனி சாமி  பதிவு பெற்ற ஆவணத்தின் மூலம்எழுதி வைத்துள்ளார். அதன் படி அருள் தந்தை அந்தோனி சேவியர் , லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் தொண்டு நிறுவனம் தொடங்கிப்பட்ட நாள் முதல் இன்று வரை அதன் மானேஜிங்  ட்ரஸ்டியாகக் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.