loader image

ST.ASSISI MATRIC HR.SEC SCHOOL

Histroy

St.அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்

Fr.அந்தோனி சேவியர் கல்விப் பணியின் மீது கொண்டிருந்ததீராத ஆர்வத்தினால் 2004– 2005- ம் கல்வியாண்டில் St.ஆன்டனீஸ் நர்சரி & தொடக்கப் பள்ளியினை லியோ சாரிட்டபில் தொண்டுநிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் 50 குழந்தைகளுடனும், ஆறு பணியாளர்களுடனும் ஆரம்பித்தார். பாளையங்கோட்டை கத்தோலிக்கமறைமாவட்டத்திற்குச் சொந்தமான பல்வேறு கல்வி நிறுவனங்களைஉருவாக்கியும், கல்விக் கூடங்களை கட்டியெழுப்பி  தரம் உயர்த்தியும் கல்விச் சேவையாற்றிய Fr.அந்தோனி சேவியர் அவர்களின் வழிநடத்துதால் கல்விச் சேவையில் St.ஆன்டனீஸ் தன்னிகரற்று விளங்கி அதே கல்வியாண்டில் மாணவ மாணவியரது எண்ணிக்கை 100–Iத் தாண்டியது.பணியாளர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளராக அல்லாமல் தாமே களத்தில் இறங்கிபணியற்றுவதையும் நீண்ட காலஅடிப்படையில் சிறிது சிறிதாக மாணவர்களுக்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொடுப்பதையும், பள்ளியில் இயற்கைச் சூழல்வேண்டும் என்பதற்காக தாமே மரங்கள் நடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த Fr.அந்தோனி சேவியர் அவர்களின் கல்விப் பணி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுவெகு வேகமாக 2006– 2007  -ம்கல்வியாண்டிலேயே St.ஆன்டனீஸ் பள்ளி  St.அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளி யாகத் தரம் உயர்ந்தது. Fr.அந்தோனி சேவியர் அவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் சேவை ஆகியவற்றினால் 10 –ம் வகுப்பில் மாணவ மாணவியரது தேர்ச்சி விகிதம் நூறு சதவீதமாகத் தொடர்ந்தது. ஆகவே பெற்றோர்கள் St. அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளியினை  மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்துமாறு வலியுறுத்தினர். மாணவ மாணவியரது நலன் கருதி Fr.அந்தோனி சேவியரது அயரா உழைப்பினால் 2013– 2014–ம் கல்வியாண்டு முதல் St. அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்று,  அரசு பொதுத் தேர்வுகளில் தமிழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகிறது. 

Fr.அந்தோனி சேவியர் அவர்களின் அர்ப்பண உணர்வு, அயராத உழைப்பு மற்றும் தன்னலம் கருதா ஆசிரியர்களின் ஈடுபாடு ஆகியவற்றினால் St.அசிசி மெட்ரிக்குலேஷன்மேல்நிலைப்பள்ளி, பாடத்திட்டக் கல்வியோடு தன்னம்பிக்கையையும் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியினையும் மாணவ மாணவியருக்கு வழங்கி வருகிறது.  இது ஒரு கிறிஸ்துவ மைனாரிடி கல்வி நிறுவனம் ஆகும். முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் அனைத்தும் அவற்றிற்கே உரிய சிறப்புடனும் பாரம் பரியத்துடனும் கொண்டாடப்படுகின்றன. சீர்மிகு விழாக்களாம் சுதந்திர தினவிழா, கல்வி வளர்ச்சி நாள், பள்ளி ஆண்டு விழா போன்ற விழாக்களின் போது, மாணவ மாணவியரின் பல்வேறு திறமைகளை வெளிக் கொணரவும், மத நல்லிணக்கம், நாட்டுப்பற்று,  சமூக விழிப்புணர்வு போன்ற பண்புகளை வளர்க்கவும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவ மாணவியரின் தனித்துவத் திறமைகளைக் கண்டறிந்து, தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறது நம் பள்ளி. அதற்காக பல்வேறு இலக்கிய மன்றங்களும் நமது பள்ளியில் செயல்படுகின்றன. நமது பள்ளியில் கல்வி கற்றுச் சென்ற  மாணமாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம், இலக்கியம், கணிதம், என்று பல்வேறு துறைகளில் உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.