Admission Open for 2024-25

Admission Open-2024-25

Histroy

St.அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, Maranthai


கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நாயர், அலேயம்மா தம்பதியினர் கிராமப்புற மாணவ மாணவியர் தரமான ஆங்கில வழிக் கல்வியைப் பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு ISMA மெட்ரிக்குலேஷன் பள்ளினை மாறாந்தைக்கருகில் திருநெல்வேலி –தென்காசி பிரதான சாலையில் ஆரம்பித்தனர். அவர்களால் அக்கல்வி நிறுவனத்தினைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்ட வேளையில் பலர் அதனைத் தொடர்ந்து நடத்த முன் வந்தும் அவர்களிடம் அந்நிறுவனத்தினை ஒப்படைக்காமல் அருட்தந்தை. அந்தோனி சேவியரின் கரங்களில் மனமுவந்து அதனை ஒப்படைத்தனர். அருட்தந்தை. அந்தோனிசேவியர் வசம் ஒப்படைத்தால் இலாப நோக்கற்ற கல்விச் சேவை என்னும் தங்களின் இலட்சியம் நிறைவேறும் என்னும் நம்பிக்கையே அதற்குக் காரணம். 2௦019–ம்ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 21 –ம் தேதியன்று ஆலங்குளம் தாலுகா , மாறாந்தை , St.மேரீஸ் நகர் திருநெல்வேலி –தென்காசி பிரதான சாலையில் லியோ சாரிட்டபில் ட்ரஸ்டுக்குச் சொந்தமான 2 –வது கல்விக் கூடமாக St.அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளி உதயமானது.
Fr . அந்தோனி சேவியர் அதன் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். Fr. அந்தோனி சேவியர் அதன் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே பள்ளியின் சூழல், படிப்பு ஆகிய அனைத்திலும் நன்கு மேம்பட்டுள்ளது. ஒழுக்கமே உயர்ந்தது என்னும் உயரிய குறிக்கோளைத் தாங்கி நிற்கும் நமது பள்ளி ஒழுக்கம், கல்வி ஆகிய கவசங்களை அணிந்து வாழ்வில் வெற்றி பெற இளம் நெஞ்சங்களுக்குக் கற்றுத் தரும் கல்விச்சோலையாகத் திகழ்கிறது. அர்ப்பண உணர்வோடும், மனித நேயத்தோடும், நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னதமான இந்தப் பயணத்தில் எங்களோடு கை கோர்த்து பயணிக்கவும், மென்மேலும் எங்கள் பணி சிறக்க ஒத்துழைப்பு நல்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.